Skip to content

இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தானை உயர்த்துவேன்-பிரதமர் ஷெரீப் ஆவேசம்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  தேரா காசி கான் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:”பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். கடவுள் எப்போதும் பாகிஸ்தானை ஆசிர்வதிப்பார். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இந்தியாவைவிட சிறந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்கவில்லை என்றால் எனது பெயரை மாற்றிக் கொள்வேன்.நான் நவாஸ் ஷெரீபின் ரசிகன், அவரது வழியைப் பின்பற்றுபவன்.

அவரால் ஆசிர்வதிக்கப்பட்ட எனது வாழ்க்கை மீது சத்தியம் செய்கிறேன், எனது உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடி, இந்தியாவைத் தோற்கடித்து பாகிஸ்தானை மகத்தான நாடாக உயர்த்துவேன்.பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடனை நம்பி இருப்பதைவிட, தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்” என்றார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் உலக வங்கி,  சர்வதேச நாணய நிதியம் என  பல இடங்களிலும் கடன் வாங்கி வருகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரின்  இந்த  வீராப்பான பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

error: Content is protected !!