இந்திய அணி, ஏற்கெனவே தாம் சந்தித்த 3 லீக் போட்டிகளிலும் (ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்) வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் தாம் சந்தித்த 3 போட்டிகளில் (நெதர்லாந்து, இலங்கை, இந்தியா) 2இல் வெற்றிபெற்று 4வது இடத்தில் உள்ளது. இதில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது. கடந்த மாதம் 15ம் தேதி நடந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசத்திடம் தோல்வியை சந்தித்தது. இதை வைத்துத்தான் வங்கதேசம், இந்தியாவை தோற்கடிக்கும் என நடிகை செகர் ஷின்வாரி தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த நடிகை எப்போதும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் கவனமாக இருப்பவர்.
ஏறடகனவெ கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்போது, இவர்தான் “இந்தியா தோல்வியடைய வேண்டும்’ என ட்வீட் செய்திருந்ததுடன், ’ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது.