திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி நகர் பகுதி சேர்ந்த மஞ்சுநாதன் பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மஞ்சுநாதனை உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர்கள் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் மஞ்சுநாதனை சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மஞ்சுநாதன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிபதி மீனா குமாரி 22ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதத்தைக் கட்ட தவறினால் 6 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார்
