நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர், சோழர், விஜயநகர, ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும் நெல்லை மிக முக்கிய நகரமாக விளங்கியது. தமிழரின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண்தான் அடையாளம். தமிழரின் பெருமையை நிலைநாட்டி வரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. நாங்குநேரி அருகே 2291 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். ரூ.120 கோடி செலவில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். நெல்லை மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம்: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்தியா வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா? வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? என கூறினார்.