கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது இந்த நிலையில் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் ஆறு ஏக்கர் பரப்பளவில் சதாசிவம் என்கிற விவசாயி நெல் விவசாயம் செய்திருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டது வீணாகிவிட்டதாக விவசாயி கூறினார். மேலும் விவசாயத்தை நம்பி தான் தங்கள் வாழ்வாதாரம் என்று விவசாயி கண்ணீர் மல்க கூறினார். எங்களுக்கு முறையான நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசு அதிகாரியிடம் கேட்டுக்கொள்கிறேன் என மிக வேதனையுடன் விவசாயி கூறினார்.