இயற்கை அழகு நிறைந்த துறையூர் அருகில் அமைந்துள்ள பச்சமலையில் மங்கலம் அருவிக்கு செல்லும் பாதையில், தற்போது தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செல்லும் வழியெங்கும் எழில் கொஞ்சும்
இயற்கையின் அருந்தோற்றத்தை கண்டு வியந்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்புதலோடு, தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பச்சமலையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.