திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்துள்ள பச்சைமலையில் டாப் செங்காட்டுப்பட்டி, பகுதிகளில் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்க்கு இரகசியதகவல் வந்த்தது( 9487464651 ) இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உத்தரவின் பேரில், பச்சை மலைப் பகுதியில் பகுதிகளில் தனிப்படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, உப்பிலியபுரம், டாப் செங்காட்டுப்பட்டி, கீழக்கரையை சேர்ந்த மாணிக்கம் 82 மற்றும் தண்ணீர்பள்ளம், பகுதையை சேர்ந்த மாணிக்கம் 50 ஆகிய இருவரும் அனுமதியின்றி இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் (SBML) பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 2 நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.