தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல்கள் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட், பேருந்து நிலையங்கள், மத வழிபாடு இடங்கள் ஆகிய பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள செக் போஸ்ட் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் மோப்ப நாய்கள் மூலம்
கண்காணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோயிலில் வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்பு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு வரும் பக்தர்களை போலீசார் ஸ்கேன் கறி மூலம் சோதனை செய்கிறார்கள். மேலும் பொதுமக்கள் கொண்டுவரும் பைகள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது. மேலும் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.