பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். தேசிய மாணவர் படை மாணவர்கள் சர்வங்காசனம், ஹாலாசனம், யேக பாதாசனம், திரிகோனாசனம், பாதஹஸ்தாசனம், தடாசனம், சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, தியானம் உட்பட செய்து காட்டினர். தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் சர்வங்காசனம்,
மகாசனம், அகர்னதனுராசனம், சிரசாசனம், உத்தித பத்மாசனம், ஏகபாத கவுன்சின் யாசனம், தனுராசனம், சக்கராசனம், உர்த்தவ தனுராசனம் செய்து காட்டினார். இதில் கவுன்சிலர் பாலு, பள்ளி மேலாண்மைக் குழு செங்குட்டுவன், உள்பட மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் நன்றி கூறினார். பட விளக்கம்: தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன் யோகா செய்து காட்டினார்.