Skip to content
Home » பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

பாபநாசம் அருகே வீரகாளியம்மன் கோயில் திருவிழா…. பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பெருமாங்குடி நடுத்தெருவில் அமைந்துள்ளது வீரகாளியம்மன் கோயில். இக்கோயில் 8-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம். முளைப்பாரி, அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலை சென்றடைந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது . இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை பெருமாங்குடி நடுத்தெரு நாட்டாமை மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *