சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப் பட்டன. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், தமிழன் பசுமை கரங்கள் லெனின் பாஸ்கர், ஆனந்த் உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று தமிழன் பசுமை கரங்கள் சார்பில் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிகளுக்கு வேம்பு, புங்கன், நெல்லி, பாக்கு உள்ளிட்ட மரக் கன்றுகள் தலா 10 வீதம் வழங்கப் பட உள்ளன.