தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலிய மங்களம் சாலை முக்கியமானச் சாலை யாகும். இதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். திருக்கருக்காவூர், மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்தச் சாலை வழியேச் செல்கின்றனர். இந்தச் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தச் சாலையில் தனியார் கல்லூரி, தனியார் மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தச் சாலையில் ரயில்வே கேட்டை தாண்டி, சிறிது தூரத்தில், பாபநாசம் பேரூராட்சி பகுதிக்குள் சாலையோரம் உள்ள டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்கள் காரை பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. டிரான்ஸ்பார்மர் அருகில் வயல்கள் உள்ளன. இந்தச் சாலையில் ஏராளமான கிராம மக்கள், மற்றும் பாபநாசம் பகுதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நடந்துச் செல்கின்றனர். கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்களை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட விளக்கம்: பாபநாசம் – சாலியமங்களம் சாலையில் டிரான்ஸ்பார்மர் சப்போர்ட் கம்பங்களின் காரை பெயர்ந்து கம்பங்கள் வெளியில் தெரிகின்றன.