தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பாபநாசம் உலக திருக்குறள் மையத்தின் 287வது கூட்டம் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. வழக்கறிஞர் அரிய அரச பூபதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் துரையரசன், செங்கதிர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைத்தலைவர் ரகுபதி வரவேற்று பேசினார். செயலாளர் ஜெயராமன் மைய செயல்பாடுகளை பற்றி பேசினார். இக்கூட்டத்தில் செல்வி டயானா கலந்து கொண்டு திருக்குறள் நெறியின்றி வாழ்வியல் அமையாது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் திருக்குறள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட இணை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.