பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தேசியக் கொடியேற்றினார். இதில்
பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, திமுக நகரச் செயலர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜாபர் அலி, சமீரா பானு உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களம், எடக்குடி, கொத்தங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி அப்துல் கனி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் வங்காரம் பேட்டை உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி தேசியக் கொடியேற்றினார். ஓவியம், கையெழுத்து, பேச்சு, கட்டுரை, மாறுவேடம் உள்ளிட்டப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் கிருஷ்ண குமார் பரிசு வழங்கினார். பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் தலைவர் செங்குட்டுவன் தேசியக் கொடியேற்றினார்.
இதில் செயலர் நவநீத கிருஷ்ணன், பொருளாளர் பன்னீர் செல்வம் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் ரோட்டரி சங்க கட்டடத்தில் தலைவர் அறிவழகன் தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தேசியக் கொடியேற்றினார். இதில் துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் விஜயன், சுரேஷ் உட்பட பங்கேற்றனர். பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டர் சுமதி தேசியக் கொடியேற்றினார். பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார். மெலட்டூர் பேரூராட்சியில் தலைவர் இலக்கியா தேசியக் கொடியேற்றினார்.