தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப் பணி சார்பில் உழவாரத் திருப் பணி நடந்தது. தஞ்சாவூர் திருக்கைலாய உழவாரத் திருப்பணி சார்பில் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் உழவாரத் திருப்பணி நடந்தது. இதில் 40 பேர் பங்கேற்று கோயில் உள், வெளிப் பிரகாரங்களில் மண்டியிருந்த தேவையற்ற செடி, கொடிகளை அப்புறப் படுத்தினர். தூண்களை சுத்தம் செய்தனர். இதில் செயல் அலுவலர் ஆசைத் தம்பி, ஆய்வாளர் லெட்சுமி, கணக்கர் சங்கர மூர்த்தி உட்பட பங்கேற்றனர்.
Tags:பாபநாசம்