நரேந்திர மோடி யின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடந்த கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். பாபநாசம் மத்திய மண்டல் தலைவர் செல்வம் வரவேற்றார். மாவட்ட பார்வையாளர் இளங்கோ, மாநிலச் செயற் குழு உறுப்பினர் வாசுதேவன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் வெங்கடேசன், மாநில அ.தொ. பிரிவுச் செயலாளர் சிவக் குமார், மயிலாடு துறை மாவட்டப் பார்வையாளர் அண்ணா மலை முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பேசிய அவர் பின்னர் வானதி சீனிவாசன்… பீகாரில் நேற்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தினர். இதேபோன்ற கூட்டத்தை அவர்களது சொந்த மாநிலங்களில் இதே கட்சிகள் உட்கார்ந்து முதலில் நடத்திக் காட்ட வேண்டும். மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்துள்ள ஒவ்வொருவரும் குடும்ப அரசியல், ஊழல் அரசியல் செய்து தங்களுடைய சுயநலத்துக்காகக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் நேர்மையாக, திறமையாக, இந்த நாட்டினுடைய மக்களின் வளர்ச்சிக்காக
உழைத்துக் கொண்டிருக்கும் மோடிக்கு மாற்றாக 16 பேர் மட்டுமல்லாமல், இவர்களுடன் 100 பேர் சேர்ந்து வந்தாலும், அவரை வீழ்த்த முடியாது. மக்களுடைய ஆதரவு பிரதமர் மோடிக்குதான் உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது. இதை எங்களது தேசிய தலைமை கூறியுள்ளது. கூட்டணி, எத்தனை தொகுதி, எந்தக் கட்சிக்கு என்னென்ன தொகுதி போன்றவற்றை எல்லாம் தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவியேற்பார் என்றார் வானதி சீனிவாசன்.