தஞ்சை மாவட்டம், பாபநாசம் லயன்ஸ் கிளப், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், ஆப்பிள் ஷாப்பிங் மால், ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இதில் டாக்டர்கள் சீனியர் கன்சல்டன்ட் கார்த்திக்கேயன், பல் டாக்டர் வினோசினி, குழந்தை நல மருத்துவர் பிரதீப், மெடிக்கல் ஆபிசர் பரிதா மாணவர்களை பரிசோதித்து ஆலோசனைகளை வழங்கினர். இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகம்மது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், மாவட்டத் தலைவர்கள் சம்பந்தம், சாப்ஜான், முத்தமிழ்ச் செல்வம், கணேசன், நிர்வாக அலுவலர் பாண்டியன், நவநீத கிருஷ்ணன், பிரபாகரன், அண்ணா செந்தில், அறிவொளி உட்பட பலர் பங்கேற்றனர்.