தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஆபிதீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. மகாத்மா கண் மருத்துவமனை டாக்டர் ஹரிஸ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 319 மாணவர்களிடம் கண் பரிசோதனை மேற்க் கொண்டனர். இதில் பள்ளி நிர்வாகி சித்தார்த்தன், பள்ளி முதல்வர் செல்வி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் பாலாஜி, உதவி ஆளுநர் வெங்கடேசன், முன்னாள் உதவி ஆளுநர்கள் சரவணன், செந்தில் நாதன், முன்னாள் தலைவர்கள் சேவியர் விவேகானந்தம், பக்ருதீன் உள்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.