தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பூமா தலைமை வகித்தார். இதில் உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். இதேப் போன்று ராஜகிரியில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு சமீமா பர்வீன் தலைமை வகித்தார். இதில் உறுப்பினர் முபாரக் ஹீசைன் உட்பட உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ஜெயக் குமார், எம்.ஜி. என்.ஆர். ஈ. இ.ஜி.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். இதில் டெங்கு விழிப்புணர்வு, பருவ மழை முன் எச்சரிக்கை
நடவடிக்கை, 100 நாள் வேலைத் திட்டம், ஜல் ஜீவன், தூய்மை பாரதம் உள்ளிட்டப் பொருட்களில் விவாதம் நடந்தது. இதேப் போன்று ரெகுநாதபுரத்தில் நடந்த கிராம சபைக்கு தலைவர் ஜெய் சங்கர் தலைமை வகித்தார். உள்ளிக் கடையில் நடந்த கிராம சபைக்கு தலைவர் கணேசன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் தலைவர் ஜெயக் குமார் உட்பட உறுப்பினர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.