தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஸ்ரீ ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா சார்பில் சலங்கை பூஜை நிகழ்ச்சி நடந்தது. திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆண்டாள் குத்து விளக்கேற்றினார். இசை அமைப்பாளர் கலைச்செல்வன் வரவேற்றார். இதில் தஞ்சை பாரத் கல்வி குழும சேர்மன் புனிதா, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறை தலைவர் குமார், பாபநாசம் உலக திருக்குறள் மைய செயலர் ஜெயராமன், சிங்கப்பூர் மேனாள் தமிழ் விரிவுரையாளர் திருநாவுக்கரசு, பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், ஓய்வு பால் வள தணிக்கை உதவி இயக்குனர் கௌதமன், பட்டிமன்ற பேச்சாளர் பாஸ்கர், பாவை தமிழ் மன்றம் குருசாமி, பத்மநாபன் உட்பட வாழ்த்தினர். ராக கீர்த்தனா சங்கீத வித்யாலயா மாணவிகள் நீத்து, சுஜித்ரா, பிரார்த்தனா, சண்முகசுந்தரி ஆகியோர் பாத நாட்டியம் ஆடினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.