தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பாபநாசம் அடுத்த பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கார்த்திகேயன், வக்கீல்கள் கண்ணுக்கினியாள், அசோக், கும்பகோணம் நிர்வாகி குருமூர்த்தி, பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், பாபநாசம் பேரூர் செயலர் பிரேம்நாத் பைரன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சேகர், தஞ்சை மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரன், சிறுபான்மையினர் நலப் பிரிவு
செயலாளர் ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்துப் பேசினார். இதில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் சாதிக் பாட்ஷா, பண்டாரவாடை அரபிக் கல்லூரி தலைவர் முகமது பாரூக், ராஜகிரி கீழப்பள்ளிவாசல் தலைமை இமாம், சாகுல் ஹமீது உட்பட கலந்துக் கொண்டனர் .