தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடைப் பெற்றது. இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தாமரைச் செல்வன், ஓலைப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் விஜய் பிரசாத், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பி.டி.ஓ சிவக்குமார் , பணி மேற்பார்வையாளர் செல்வராணி உட்பட பங்கேற்றனர்.