தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், அய்யம் பேட்டை அடுத்த வடக்கு மாங்குடி ஊராட்சியில் வாய்க் கால் மீது பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், தி.மு.க அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார ஊராட்சி கூத்தரசன், கிராம ஊராட்சி முகம்மது அமானுல்லா, ஒப்பந்தத் தாரர் நடராஜன், திமுக நிர்வாகிகள் உட்பட பங்கேற்றனர்.