தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத் துறை ஸ்ரீ பாலைவனநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைப் பெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் செல்வி தலைமை வகித்தார். பாபநாசம் ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆன்மீக பேரவை உறுப்பினர் முருகராஜ் வரவேற்றார். இதில் பசுபதிகோவில் இறைப்பணிக் குழு சோம பாஸ்கரன், நல்லூர் ராஜா வேத பாடசாலை ரவிசங்கர் உட்பட பங்கேற்று வாழ்த்தினர். பாபநாசம் ஸ்ரீ கலைக் கோயில் மியூசிக் அகாடமி மாணவிகள், வேலூர் விருத்திகா ஸ்ரீ, மும்பை அருணா ரேகா, தஞ்சாவூர் சந்திரசேகரன், சென்னை சுனிதா ஹரி, லலிதா கணபதி, ராதிகா, தஞ்சாவூர் சௌம்யா உள்ளிட்டோரின் நாட்டிய நிகழ்ச்சி நடைப் பெற்றது. ஆன்மீகப் பேரவை சுவாமிநாதன் நன்றி கூறினார்.
