மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுதும் அனைவரும் இத் தேர்வில் வெற்றி பெறவும், சாதனை படைக்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயத்தை நீக்கி, தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்க் கொள்ளுங்கள். கடின உழைப்பும், நேர்மையும் எப்போதும் பலன் தரும். தேர்வில் நன்கு தெரிந்த விடைகளை முதலில் தெளிவாக எழுதுங்கள்.
எவ்வித கவனச் சிதறல்களுக்கும் ஆட்படாமல், உற்சாகத்தோடும், புத்துணர்வோடும், ஓர்மைச் சிந்தனையோடு தேர்வை எழுதுங்கள். உங்களின் எதிர்காலம் வளமாகவும், நலமாகவும் அமைய எனது வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.