பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் இன்சூரன்ஸ் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இதில் எல்.ஐ.சி தஞ்சாவூர் கிளை வளர்ச்சி அதிகாரி சங்கர் பங்கேற்று இன்சூரன்ஸ் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார். இதில் சங்கச் செயலர் கண்ண தாசன், சிவா, உட்பட ஏராளமான களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.