தஞ்சை மாவட்டம், பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலும், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் முக்கிய இடங்களில் நடைபெற்றது. இதில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்களும், தீயணைப்பு துறை வீரர்களும் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….
- by Authour
