தென்னகப் பண்பாட்டு மையம், பாபநாசம் லயன்ஸ் கிளப், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இணைந்து நடன நிகழ்ச்சியை நடத்தின. பாபநாசம் வித்யா பாட சாலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவைச் சேர்ந்த கலை குழுவினர் நடன நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், அரசு குழுமம் நிர்வாக இயக்குநர் செந்தில்
குமார், ஆடிட்டர் சண்முகம், லயன்ஸ் கிளப் ராஜா முகமது, முத்தமிழ்ச் செல்வம், சாப்ஜான், நவநீத கிருஷ்ணன், மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ், சம்பந்தம் உட்பட பொது மக்கள் பங்கேற்றனர். பட விளக்கம்: பாபநாசத்தில் மத்தியப் பிரதேச கலைக் குழு சார்பில் நடன நிகழ்ச்சி நடந்தது.