தஞ்சை மாவட்டம், பாபநாசம் கோர்ட்டின் வட்ட சட்டப் பணிகள் குழு மையத்தில், சமரச துணை மையம் துவக்க விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழிகாட்டலின் பேரில், பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி சமரசத் துணை மையத்தை திறந்து வைத்து பேசினார். முன்னதாக தலைமை எழுத்தர் கார்த்திக் கேயன் வரவேற்றார். இதில் அரசு வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், வழக்கறிஞர்கள் கம்பன், ஜெயக்குமார் , இளையராஜா உட்பட கலந்து கொண்டு பேசினர். இள நிலை உதவியாளர் விக்னேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்தார். இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட கலந்துக் கொண்டனர். பாபநாசம் வட்ட சட்ட பணியாளர் குணசீலன் நன்றி கூறினார்.
