தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மூலம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இதில் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் பாலசுப்ரமணியன், அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், சட்ட உதவி மைய உதவியாளர் ராஜேஷ்குமார், சட்ட தன்னார்வலர் தனசேகரன் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.