தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ 1 லட்சம் கோடி குறைப்பு, விவசாயிகள் உர மானியம் ரூ 30,000 கோடி குறைப்பு, 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ 29,000 கோடி குறைப்பு, பி.எம். கிஸான் திட்டத்திலிருந்து 800 லட்சம் விவசாயிகள் வெளியேற்றம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வி.தொ.ச ஒன்றியச் செயலர் முருகேசன், விவசாய சங்க ஒன்றியச் செயலர் அப்துல் கபூர் தலைமை வகித்தனர். இதில் மார்க்சியக் கம்யூ மாவட்டக் குழு காதர் ஹீசைன், ஒன்றியச் செயலர் முரளி தரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். நகல் எரிக்கும் முன் காவல் துறையினர் அவற்றை பறித்தனர்.