தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் அருகாணுயிர் காப்பு மற்றும் சுற்றுச் சுழல் அறக்கட்டளையைச் சேர்ந்த காணுயிர் அறிஞர் டாக்டர் சதீஸ் பேசினார். அவர் பேசும் போது 26 வகையான பாம்புகள் உள்ளன. 3 வகையான பாம்புகளுக்குத் தான் விஷமுள்ளது. பாம்பை துன்புறுத்தக் கூடாது. பாம்பின் விஷம் அதற்கு இரையை செறிக்க வைக்க உதவும். விஷமுள்ள பாம்புகள் இரவில் தான் வெளியில் வரும். தேனி இனம் அழிந்தால் 4 வருடத்தில் மனித இனமே அழிந்து விடும். டெல்டாவில் நரி இனமே இல்லை. அவை தான் பன்றிகளை வேட்டையாடும். இதனால் பன்றிகள் பெருகி விட்டன. பூச்சிகளை சாப்பிடக் கூடிய சிறு பறவைகள் கிடையாது. இதனால் பூச்சிகள் பெருகி விட்டன. நட்டுவாக்கிளி என்பது கருந்தேள். உயிரினங்களை வாழ விடுவோம். நாமும் வாழுவோம் என்றார். மாவட்ட பாரஸ்ட் ஆபிசர் ஓய்வு செல்வம் பேசும் போது எல்லா உயிரினங்களுக்கும் வாழக் கூடிய உரிமை உண்டு. இயற்கையோடு பேசுங்கள். இயற்கை திருப்பி அடித்தால் நம்மால் தாங்க முடியாது. மண் புழுவை நம்மால் உருவாக்க முடியாது. உலகத்தை நாம் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதில் பாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசர் ரஞ்சித் குமார், பாபநாசம் பிரிவு வனவர் ரவி, வனவர் சமூக காடுகள் இளஞ் செழியன், தஞ்சாவூர் பிரிவு வனவர் மணி மாறன். பாபநாசம் வன காப்பாளர் சண்முக வேல், ஊராட்சி துணைத் தலைவர் பிருங்களா ராணி உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். ஓவர் சீயர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
