தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கொத்தங்குடி ஊராட்சி, எடக்குடி கிராமத்தில் பிஎம்ஏஜி ஒய் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப் பட உள்ள பொது விநியோகக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது. ரூ 14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட உள்ள பொது விநியோக கட்டட பூமி பூஜை நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, மாவட்டக் குழு உறுப்பினர் ராதிகா, ஊராட்சி துணைத் தலைவர் குமார், ஒப்பந்தக்காரர் அருணாச்சலம் உட்பட கலந்துக் கொண்டனர்.