சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் பாஜ தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் புதிய தலைமுறை நிருபர் முருகேசன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அண்ணாமலை நடந்து கொண்ட விதம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன.. இந்தநிலையில் ஐஜேகே கட்சியின் நிறுவனத்தலைவரும் புதிய தலைமுறை நிறுவனத்தின் தலைவரும் பெரம்பலூர் எம்பியுமான பாரிவேந்தர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் நிருபர்களிடம் கூறுகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறிய வயதில், பெரிய பதவிக்கு வந்துள்ளார். மிகச்சிறந்த அறிவாளி. அவர் இல்லாவிட்டால் இன்று எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அனைத்து புள்ளிவிவரங்களையும் தயாராக வைத்துள்ளார். வரலாறு தெரிந்து வைத்திருக்கிறார். ஐபிஎஸ் வரை படிப்பது சாதாரண செயல் அல்ல. செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்கிறார். அவர் அப்படி சொல்லும்போது, 50 முதல் 100 செய்தியாளர்கள் வரை அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டு சப்தமிட்டு கேள்விகளை எழுப்புகின்றனர். அவரிடம் போட்டிப் போட்டுக்கொண்டு சில கேள்விகளைக் கேட்பது முறையல்ல. செய்தியாளர்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் முன்பே அடுத்தடுத்த நபர்கள் கேள்விகளைகேட்பதால் சூழ்நிலை மாறி விடுகிறது. மற்றபடி, தமிழகத்துக்கு தேவையான சிறந்த தலைவராக அண்ணாமலை உள்ளார். செய்தியாளர்களின் தேவையற்ற அழுத்தத்தால் ஏற்பட்ட பிரச்சினை அது. எதிர்பாராதது இவ்வாறு அவர் கூறினார். இது தான் நிருபர்களின் நிலைமை.. எந்த ஒரு விஷயமானாலும் நிறுவனம் என்ன நினைக்கிறதோ அதை மனதில் வைத்து வேல செய்யணும்… கொஞ்சம் சுயமா சிந்திச்சுட்டா இப்படி தான் மாட்டிக்கணும்..