Skip to content
Home » பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே பி. அணைப்பாளையம் ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் அமராவதி ஆற்றில் தடுப்பணையில் தண்ணீர் வற்றியதால் தடுப்பணையில் தண்ணீர் தேங்கி சிறு குளம் போல் உள்ளது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தடுப்பணையில்

உள்ள மீன்கள் தண்ணீரில் செத்து கரைகளில் ஒதுங்கி உள்ளதால் அப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தடுப்பணை அருகே அரசு ஆரம்பப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் அந்த பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவி விடுமோ? எனவும், தடுப்பணை தண்ணீர் ஆழ்துளை கிணற்றில் கலந்து விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!