சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பகுதிகள் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் கார்களை பாதுகாப்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதனால் பள்ளிக்கரணை நோக்கி செல்லும் ரெயில்வே மேம்பாலம், தரமணியில் இருந்து வேளச்நேரி 100 அடி சாலை நோக்கி செல்லும் 2 மேம்பாலங்களிலும் கார்களை நிறுத்தி வருகின்றனர்.