கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து லாரி முழுவதும் தீ பரவ தொடங்கிய நிலையில், இதனை பார்த்த லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை கரையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.
லாரியில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.