Skip to content
Home » ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

  • by Senthil

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி நேற்று இரவு நடந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.

சிறந்த திரைப்படம்,நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 7 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

புவர் திங்ஸ் என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார்.ஆஸ்கர் விழாவில் புவர் திங்ஸ் என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இதனை பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா வழங்குவதற்காக மேடையில் தோன்றினார்.

அவர் வருவதற்கு முன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கிம்மல் பார்வையாளர்களை நோக்கி, நிர்வாண மனிதர் ஒருவர் மேடையில் இன்று ஓடி சென்றால் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? அது பைத்தியக்காரத்தனம்போல் இருக்காது? என கேட்டார்.

கிம்மல் அப்படி கேட்டதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை எழுந்தது. அப்போது, மேடையின் ஓரத்தில் இருந்து ஜான் சீனா தலையை எட்டி பார்க்கிறார். பின்னர் அவர், நிர்வாண நிலையில் மேடையில் மெல்ல நடந்து வருகிறார். எனினும், அந்தரங்க பாகத்தை மறைத்தபடி மேடையில் மைக் முன்னே நின்று பேசினார். அவர் கிம்மலிடம், என்னுடைய எண்ணங்களை நான் மாற்றி கொண்டேன். மேடையில் நிர்வாண நிலையில் ஓடும் செயலை செய்ய விரும்பவில்லை. அது சரியாக இருக்கும் என எனக்கு தோன்றவில்லை. இது ஓர் அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கூறுவதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!