Skip to content
Home » ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

ஆஸ்கர் தம்பதியால் 91 வன பணியாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு

  • by Authour

முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான . பொம்மன்,  பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்து, பாராட்டுப் பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

Oscar Awards 2023 The Elephant Whisperers Won Oscar Award In Best  Documentary Short Film Category | Oscar Awards 2023: சிறந்த ஆவண  குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் “The Elephant ...

Read all Latest Updates on and about the elephant whisperers oscar

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த  2022-ம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்றுஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

பொம்மன் தம்பதியை  முதல்வர் கவுரவித்த இந்த நிகழ்வில்,  வனத்துறை அமைச்சர் .மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு,, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாகு,   முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர். ஸ்ரீனிவாஸ் ஆர், ரெட்டி, புலிகள் காப்பக கள இயக்குநர். து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *