தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் இரு குட்டி யானைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகிய இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers), ஆவணப்படம் ஆஸ்கர் விருதை பெற்றது.
இந்த விருதினை கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதையொட்டி இந்த படக்குழுவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் தம்பதிக்கு தலா ரூ.1 லட்சம் காசோலையுடன் கேடயமும் வழங்கினார். அப்போது அவர்களுடன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமை செயலாளர் இறையன்பு, காப்பாளர் ஸ்ரீநிவாஸ்ஆர் ரெட்டி, புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.