தமிழகத்தில் ஊட்டி முதுமலை காட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஊட்டியில் தயாரிக்கப்பட்ட ஆவண குறும்படத்திற்கு…. ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
தாய் யானைகளை விட்டு வழிதவறி வந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகள்2019ல் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. மலைவாழ் மக்களான பாகன் பொம்மன், அவரது மனைவி பெல்லி ஆகியோர் அந்த குட்டியானையை அன்புகாட்டி பிள்ளையைபோல வளர்க்கிறார்கள். இதைபற்றிய குறும்படம் தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற பெயரில் ஊட்டியை சேர்ந்த கார்த்தகி கனசால்வாஸ் என்ற பெண் இயக்குனர் இந்த படத்தை இயக்கி இருந்தார். அவர் இன்று ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்.