தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டில் ஒசாகா மாகாணத்தில் ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். அப்போது ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் நோபுஹிகோ யமாகுஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.