தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார். இம்மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்
வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி, ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.