Skip to content
Home » மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

மூளைச்சாவில் உயிரிழந்த பெண்…உடல் உறுப்புகள் தானம்….குடும்பத்தினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே ஆறுதல்..

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இறந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அரசின் சார்பில் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *