சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப். 14, 15 தேதிகளில் இவை ஒப்படைக்கப்பட வேண்டும், அனைத்து பொருட்களும் மதிப்பீடு செய்தே அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2004ம் ஆண்டு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பெங்களூரு கருவூலத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த நகைகள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளன.
ஜெயலலிதாவின் நகைகள் -பத்திரங்களை ஒப்படைக்க உத்தரவு..
- by Authour
