தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கட்சியின் கட்டமைப்புகளை சரிசெய்து வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கடந்த சில நாட்களாக பரபரப்புடன் காணப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. ஒரு பூத்துக்கு ஒரு செயலாளர் என்ற வகையில் 70 ஆயிரம் பேரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனத்திற்காக பிரத்யேக ஆன்லைன் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் பூத் கமிட்டி செயலாளர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.