தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி கல்வி கற்று வருகின்றனர்.
இம்மாணவர்கள் சார்பில் கிராம மக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பயன் பெறும் வகையில் அசோலா வளர்ப்பு மற்றும் பயன்கள் குறித்து செய்முறை விளக்கம் கலந்தாய்வு நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமையில் ஈச்சங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி மற்றும் உதவி வேளாண் அலுவலர் சர்ச்சில் ஆகியோர் முன்னிலையில், இன்றைய சூழலில் அசோலா வளர்ப்பு மற்றும் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் செய்முறை விளக்கம் அளித்து மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வேளாண் புல மாணவர்கள் திருமால், ஏகாஸ்வரன், பரசுராம், ஜேக்கப் கிருபாகரன், சீனீவாசன், வெங்கடேஷ் இன்பசாகர், சஞ்சய், சக்தி சீனீவாசன், சதீஷ் குமார் செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.