சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.,19) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 23ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜன.,20ம் தேதி காலை லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் ஜன.,24,25ல் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது