தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மாட்டும் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் பொறுத்தவரையில், 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூரில் மழை பெய்யும் மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், நாகையிலும், மழை பெய்யலாம்
திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருவண்ணாமலை, மிதமான மழைக்கு வாய்ப்பு புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 22 செமீ மழையும், திருவாரூரில் 21 செமீ மழையும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 20 செமீ மழையும் பதிவாகி இருக்கிறது. இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.