ஒபிஎஸ் அணியின் சார்பில் அதிமுக51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை
அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக தலைமை கழகம் வடிவில் இந்த மாநாட்டிற்கான மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்கள் போடப்பட்டிருந்தது. இரவை பகலாக்கும் வகையில் மின்விளக்குகளால் மாநாடு நடைபெறும் இடம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது கண்கவர் நிகழ்வாக அமைந்தது. இந்த மாநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பட்டனர் – மாநாடு நடைபெறும் இடத்தில் நடுமையத்தில் சிகப்பு கம்பளத்தில் ஒ.பி.எஸ் வருகை தரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கைகளை உயர்த்திக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை காட்டியபடி ஓபிஎஸ் தொண்டர்கள் வெள்ளத்தில் மேடைக்கு வந்தார் –
மேடைக்கு முன்பாக வந்த போது ஜல்லிக்கட்டு காளை அழைத்து வந்து வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரம்மாண்ட மாலைகளை அணிவித்தும் வீர வாலை பரிசாக அளித்தும் கெளரவித்தனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய இந்த மாநாட்டிற்கு தென்மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான தொண்டர்கள் வந்திருந்தனர். மாலை 4 மணியளவில் தொண்டர்கள் வர ஆரம்பித்த நிலையில் மாலை 6 மணிக்கு ஜி கார்னர் மைதானம் நிரம்பி வழிந்தது. ஓபிஎஸ் திறந்த வேனில் மாநாட்டு திடலுக்கு வந்து மேடைக்கு வந்து அமரும் வரை அமைதியாக இருந்தது. தலைவர்கள் பேச ஆரம்பித்ததும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது. விழா நாயகர் ஓபிஎஸ் பேசும் போதும் பாதி சேர்கள் காலி என்கிற நிலை.. பேசி முடிக்கும் போது கிட்டத்தட்ட மைதானமே காலி என்கிற நிலை.. ஓபிஎஸ்சின் திருச்சி கூட்டத்தை பொருத்தவரை அவரது ஆதரவு தொண்டர்கள் வந்தார்கள் சென்றார்கள்.. என்பது தான் எதார்த்தம்…